/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீனவர்களை விடுவிக்க கோரி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
மீனவர்களை விடுவிக்க கோரி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 30, 2025 06:45 AM

புதுச்சேரி: காரைக்கால் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி மாநில அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன், நடந்தது. இதில் பங்கேற்ற மீனவ பெண்கள், இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும் எனக்கோரி,கலெக்டர் அலுவலகம் முன்'ஒப்பாரி'போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதில் தலைமை தாங்கிய அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது:
காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த, 13 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி, அவர்களை கைது செய்தனர்.
அதில் 2 மீனவர்கள் ஆபத்தான நிலையிலும் 3 மீனவர்கள் காயத்துடனும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக முதல்வர் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தின் மீது மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
குண்டடிப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும், 2 மீனவர்களையும் போர்க்கால அடிப்படையில் புதுச்சேரிக்கு கொண்டு வந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் கவர்னர் டில்லி சென்று, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.