/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெல்லித்தோப்பில் சிறப்பு ஆய்வு தேவை: அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு கோரிக்கை

ADDED : டிச 09, 2025 05:51 AM
புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதியில் அவசர தேவைகள் குறித்த சிறப்பு ஆய்வை உடனடியாக மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க., உரிமை மீட்டு குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், புதுச்சேரி மாநில தலைமை செயலருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது;
நெல்லித்தோப்பு தொகுதியில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். எனினும், கடந்த 10 ஆண்டுகளாக புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. சிறப்பு கூறு நிதியின் கீழ் மேற்கொள்ள வேண்டிய குறைந்தபட்ச பணிகள் கூட நிறைவேற்றப்படாமல் உள்ளது.
குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயலிழந்த நிலையில் உள்ள ஹமாஸ் விளக்குகள், வெண்ணிலா நகரில், புதிய கழிப்பறை வசதி அமைக்கப்படாமல் உள்ளது. சக்தி நகர் 1ம் தெருவில், பயன்பாடின்றி பூட்டி கிடக்கிறது. பெரியார் நகர் மெயின் ரோட்டில் உள்ள அங்கன்வாடி கட்டடம் சமூக விரோதிகளின் கூடமாக மாறியுள்ளது.
பெரியார் நகரில், பழைய குடிநீர் குழாய்கள் அவசரமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள இந்த அவசரத் தேவைகள் குறித்த சிறப்பு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.