/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொசு மருந்து அடிக்க வலியுறுத்தி அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு போராட்டம்
/
கொசு மருந்து அடிக்க வலியுறுத்தி அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு போராட்டம்
கொசு மருந்து அடிக்க வலியுறுத்தி அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு போராட்டம்
கொசு மருந்து அடிக்க வலியுறுத்தி அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு போராட்டம்
ADDED : நவ 08, 2025 01:37 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் கொசு உற்பத்தியை தடுக்க கொசு மருந்து அடிக்க வலியுறுத்தி, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழுவினர், மலேரியா பிரிவு துணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு, மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமை தாங்கினார். போராட்டத்தில் பங்கேற்றவர்கள்,கொசுவலையை போர்த்தியும் மற்றும் எலெக்ட்ரிக் கொசு பேட்டினை கையில் ஏந்தி கொசு மருந்து அடிக்க வேண்டி கோஷமிட்டனர்.
தொடர்ந்து, திட்ட அதிகாரி முருகனிடம், மாநிலம் முழுவதும் கொசு மருந்து அடிக்கவலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
போராட்டத்தில், குப்புசாமி, வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் சேகர், பிள்ளைத்தோட்டம் பிரபு, தம்பா, இளவரசு, வரதராஜ், பெரியார் நகர் சக்திவேல், முனியன், முனிரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர்.
இது குறித்து ஓம்சக்தி சேகர் கூறுகையில், 'டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் அதிகரித்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு பொது மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கென தனி வார்டு அமைத்து, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருந்துகளைதயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில், அடுத்த கட்டமாக சுகாதார துறை அலுவலகங்களை முற்றுகையிடுவோம்' என்றார்.

