/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அ.தி.மு.க., நீர், மோர் பந்தல் திறப்பு
/
அ.தி.மு.க., நீர், மோர் பந்தல் திறப்பு
ADDED : ஏப் 08, 2025 04:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி மாநில அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் அறிவுறுத்தலின் பேரில், அ.தி.மு.க., மருத்துவ அணி சார்பில், உப்பளம், டாக்டர் அம்பேத்கர் சாலை, வாணரப்பேட்டை, பில்லு கடை சந்திப்பு ஆகிய பகுதிகளில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
இதன் துவக்க விழாவில், மாநில அ.தி.மு.க., மருத்துவ அணி தலைவர் டாக்டர் பிரபாகரன் நேற்று திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

