ADDED : அக் 18, 2025 07:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில், எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
புதுச்சேரி செந்நாடா சங்கம் சார்பில், நடந்த ஊர்வலத்தை கல்லுாரி முதல்வர் வீரமோகன் துவக்கி வைத்தார். செந்நாடா சங்க ஒருங்கிணைப்பாளர் சந்திரா முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் சிவக்குமார், ஷிண்டே, கஜோர், மீனா உட்பட பலர் பங்கேற்றனர்.
ஊர்வலம், கல்லுாரியில் இருந்து புறப்பட்டு, முக்கிய சாலை வழியாக சென்று, வைத்திக்குப்பத்தில் நிறைவுபெற்றது.