/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் அரசு பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பாகூர் அரசு பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாகூர் அரசு பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாகூர் அரசு பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : பிப் 04, 2026 05:24 AM

பாகூர்: பாகூர் அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமைaயாசிரியர் பத்மாவதி தலைமை தாங்கினார். சமூக அறிவியல் ஆசிரியர் துரைசாமி வரவேற்றார். பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஆனந்தவேலு வழிகாட்டுதலின் படி, டாக்டர்கள் சுஜித், மிதுன், மூத்த செவிலியர் பவுனாம்மாள் ஆகியோர் பங்கேற்று எய்ட்ஸ் நோய் என்றால் என்ன, அந்நோய் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து, மாணவர்களுக்கு விளக்கி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் உமா மகேஸ்வரி, தம்பி ராஜலட்சுமி, சிவபாலன் ஆகியோர் செய்திருந்தனர்.
ஆசிரியர் பிரபாவதி நன்றி கூறினார்.