/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர் ஓட்டம்
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர் ஓட்டம்
ADDED : ஜூலை 23, 2025 11:15 PM

திருபுவனை: மதகடிப்பட்டு அடுத்த கலித்தீர்த்தால்குப்பத்தில் உள்ள காமராஜர் அரசு கல்லுாரியில் ரெட் ரிப்பன் கிளப் மற்றும் புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து 'எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தை நடத்தின.
துவக்க விழாவில் கல்லுாரியின் ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கனகவேல் தலைமை தாங்கி, எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
திருபுவனை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஐஸ்வர்யா, தமிழ் துறை தலைவர் அன்புச்செல்வன், கணிதத் துறை தலைவர் ராஜ்மோகன், கணினி துறை தலைவர் வைத்தியலிங்கம், சுற்றுலா துறை தலைவர் தங்கப்பன், வணிகவியல் துறை தலைவர் செந்தமிழ்ராஜா, தமிழ்த் துறை உதவி பேராசிரியர் சவுந்தரவள்ளி உள்பட பலர் பங்கேற்றனர்.
கல்லுாரி மாணவர்கள் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பாதாகைகளை ஏந்தி, கலிதீர்த்தாள்குப்பம், குச்சிப்பாளையம், பி.எஸ்., பாளையம் பஸ் நிறுத்தம், நான்கு முனை சந்திப்பு வரை 5 கி.மீ., துாரம் சென்று, மீண்டும் அதே வழியில் கல்லுாரிக்கு திரும்பினர். வரலாற்றுத் துறை தலைவர் பெருமாள் நன்றி கூறினார்.