/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எய்ட்ஸ் கவுன்சில் ஒருங்கிணைப்பு கூட்டம்
/
எய்ட்ஸ் கவுன்சில் ஒருங்கிணைப்பு கூட்டம்
ADDED : ஜூலை 11, 2025 04:11 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில எய்ட்ஸ் கவுன்சில் மற்றும் எய்ட்ஸ் திட்ட சட்டசபை குழு எம்.எல்.ஏ.,க்கள் ஒருங்கிணைந்த கூட்டம் சன்வே ஓட்டலில் நடந்தது.
சுகாதார துறை செயலர் ஜெயந்த குமார் ரே வரவேற்றார். குழுவின் ஒருங்கிணைப்பாளரும் சபாநாயகருமான செல்வம் முன்னிலை வகித்தார். சம்பத் எம்.எல்.ஏ., பங்கேற்று பேசினார்.
முதல்வர் ரங்கசாமி கூட்டத்தை துவக்கி வைத்து, பேசினார். கூட்டத்தில் எய்ட்ஸ் தடுப்பு திட்டம் புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் விதம், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசால் அளிக்கப்படும் உதவி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மத்திய அரசின் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் துணை இயக்குநர் ஜெனரல் டான்சின் டிகிட், எய்ட்ஸ் கட்டுபாட்டு திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் சுகாதார துறை இயக்குநர் செவ்வேள், சங்க திட்ட இயக்குநர் அருள் விசாகன், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.