/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதுரை, கொச்சி நகரங்களுக்கு விமான சேவை; சாத்திய கூறுகள் ஆராயப்படும்; முதல்வர் ரங்கசாமி

ADDED : டிச 21, 2024 06:33 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து மதுரை, துாத்துக்குடி, கொச்சிக்கு விமான சேவை துவக்க சாத்திய கூறுகள் ஆராயப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் மீண்டும் விமான சேவையை, துவக்கி வைத்து முதல்வர் ரங்கசாமி கூறியதாவது;
விமான சேவை தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது அரசின் எண்ணம். விமான நிலைய விரிவாக்கம் செய்யும் பணி விரைவில் துவங்கும்.
விமான நிலைய விரிவாக்கத்திற்கான தமிழக நிலங்களை கையகப்படுத்த தமிழக முதல்வரை தொடர்பு கொண்டு பலமுறை வலியுறுத்தி உள்ளோம்.
மீண்டும் வலியுறுத்துவோம். விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால் அதிக எண்ணிக்கையிலான விமானம் வரும். அதன் மூலம் சுற்றுலா வளர்ச்சி, ஐ.டி., போன்ற தொழில் நிறுவனங்கள் உருவாகும்.
புதுச்சேரியில் இருந்து மதுரை துாத்துக்குடி, கொச்சி, திருவனந்தபுரம், கோழிகோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு விமானம் இயக்க சாத்திய கூறுகள் ஆராயப்படும். இவ்வாறு முதல்வர் கூறினார்.