/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.ஐ.டி.யு.சி., பெண்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம்
/
ஏ.ஐ.டி.யு.சி., பெண்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 21, 2024 04:50 AM

புதுச்சேரி : மேற்கு வங்க பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி., பெண்கள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பாலியல் பலாத்காரம் செய்து பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணையை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., உழைக்கும் பெண்கள் சார்பில் ஜிப்மர் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் லதா, வசந்தி, ராஜகுமாரி, பைரவி முன்னிலை வகித்தனர்.
சங்க துணை தலைவர் சந்திரசேகர், மாநில செயலாளர்கள் தயாளன், துரை செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

