தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏ.ஜே., பள்ளி மழலையர் பட்டமளிப்பு விழா

 ஏ.ஜே., பள்ளி மழலையர் பட்டமளிப்பு விழா

 ஏ.ஜே., பள்ளி மழலையர் பட்டமளிப்பு விழா


ADDED : ஏப் 25, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 08:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தவளக்குப்பத்தை அடுத்த டி.என். பாளையத்தில் உள்ள ஏ.ஜே. மேல்நிலைப் பள்ளி சி.பி.எஸ்.இ., மழலையர் பிரிவு மேல் பாலர் வகுப்பிற்கான பட்டமளிப்பு விழா நடந்தது.

நல்லான் மருத்துவமனை மருத்துவர் வந்தனா கோன் மற்றும் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் சந்திரசேகரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். ஆசிரியை சாருலதா வரவேற்றார்.

பள்ளியின் தாளாளர்கள் மரிய ஜீனா ஜான்சன், மேசி ஜான்சன், முதல்வர் கார்த்திகேயன் சந்திரசேகரன் மற்றும் சிறப்பு விருந்தினர் வந்தனா கோன் ஆகியோர் கலந்துகொண்டு, 150க்கும் மேற்பட்ட மழலையர்களுக்குப் பட்டம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்தினர்.

முன்னதாக, சிறப்பு விருந்தினருக்குப் பள்ளி முதல்வர் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். மாணவிகளின் கண்கவர் நாட்டிய நிகழ்ச்சி, மழலையரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பட்டமளிப்பு விழா உடையணிந்த குழந்தைகளுடன் பெற்றோர்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். கரோலின் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us