/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அல்கமி வாழ்வியல் பயிற்சி வகுப்பு புதுச்சேரியில் நாளை அறிமுக விழா
/
அல்கமி வாழ்வியல் பயிற்சி வகுப்பு புதுச்சேரியில் நாளை அறிமுக விழா
அல்கமி வாழ்வியல் பயிற்சி வகுப்பு புதுச்சேரியில் நாளை அறிமுக விழா
அல்கமி வாழ்வியல் பயிற்சி வகுப்பு புதுச்சேரியில் நாளை அறிமுக விழா
ADDED : ஜன 18, 2025 05:26 AM
புதுச்சேரி : வாழ்வில் வெற்றி பெறும் கலையை, குரு மித்ரேஷிவா கற்றுத்தரும் அறிமுக வகுப்பு, புதுச்சேரியில் நாளை நடக்கிறது.
வாழ்வில் வெற்றி பெறும் கலையை அனைவருக்கும் கொண்டு சேர்க்க குரு மித்ரேஷிவா, உலகெங்கும் அல்கமி வகுப்புகளை நடத்தி வருகிறார். வாழ்க்கையில் நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றா, நினைத்த அனைத்தையும் நிஜமாக்க, சர்வதேச அளவில், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி வருகிறார்.
இந்த அறிமுக வகுப்பு, புதுச்சேரி, லால் பகதுார் சாஸ்திரி சாலையில் உள்ள கம்பன் கலையரங்கில், நாளை 19ம் தேதி நடக்கிறது. மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, நடக்கும் வகுப்பை, குரு மித்ரேஷிவா நடத்துகிறார்.
இதில், கலந்து கொள்ள விரும்புவோர், 96559 92559 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம்.