/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி விளையாட்டு விழா
/
அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி விளையாட்டு விழா
ADDED : மே 10, 2025 01:29 AM

புதுச்சேரி: புதுச்சேரி, அறுபடை வீடு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் உள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் விளையாட்டு விழா நடந்தது.
பல்கலைக்கழக., வேந்தர் கணேசன் வழிக்காட்டுதல் படி, கல்லுாரி டீன் டாக்டர் செந்தில்குமார் மேற்பார்வையில், கல்லுாரியின் இயக்குநர் ஆன்ட்ரூ ஜான் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக தேசிய கோ - கோ விளையாட்டு வீரர் கபிலன், தேசிய கபடி வீரர் வினோத் குமார் பங்கேற்று கல்லுாரி மாணவர்களிடம் விளையாட்டு மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, விளையாட்டு விழாவினை துவக்கி வைத்தனர்.
இதில், மாணவர்கள் அணிகளாக பிரிக்கப்பட்டு மார்ச் பாஸ்ட், சிலம்பம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஏற்பாடுகளை கல்லுாரியின் நிர்வாக அதிகாரி சந்துரு மற்றும் மாணவர் அமைப்பு, நுண்கலை அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.