/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு 'கோல்டு வின்னர்' அங்கீகாரம் வழங்கல்
/
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு 'கோல்டு வின்னர்' அங்கீகாரம் வழங்கல்
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு 'கோல்டு வின்னர்' அங்கீகாரம் வழங்கல்
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு 'கோல்டு வின்னர்' அங்கீகாரம் வழங்கல்
ADDED : டிச 31, 2024 05:02 AM

புதுச்சேரி : விநாயகா மிஷன் பல்கலைக்கழக அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு இந்திய தொழில் கூட்டமைப்பின் 'கோல்டு வின்னர்' அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை, புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை, சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லுாரி ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு தனியார் கல்லுாரி பிரிவில் இந்திய தொழில் கூட்டமைப்பு மூலம் 'கோல்டு வின்னர்' அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:
இந்திய தொழில் கூட்டமைப்பு, அரசு சாரா வணிகம் மற்றும் தொழில் நிறுவனமாகும். இது, சிறந்த கல்வி நிறுவனங்கள், தொழில்துறைகள் மற்றும் தனி நபர்களை அங்கீகரித்து, விருது வழங்கி வருகிறது.
அதன்படி, விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிக்கு, 'கோல்டு வின்னர்' விருது வழங்கி உள்ளது.
தொழில்துறை தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள், பயிற்சிகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஆராய்ச்சி மற்றும் புதுமை தொழிற்கல்வி ஆகியவற்றை ஆராய்ந்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கான பிரிவில் 'கோல்டு வின்னர்' அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விருது பெறுவதற்கு சிறந்த பங்களிப்பாற்றிய துறையின் டீனை பல்கலைக்கழக வேந்தர் கணேசன், துணைவேந்தர் அனுராதா கணேசன், துறை பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.