தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இரண்டாம் தற்செயல் கலப்பு  ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு 

 இரண்டாம் தற்செயல் கலப்பு  ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு 

 இரண்டாம் தற்செயல் கலப்பு  ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு 


ADDED : மார் 29, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 10:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி ஓட்டுச்சாவடிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு (இ.வி.எம்) இயந்திரங்கள் மற்றும் வி.வி.பி.ஏ.டி., இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட இ.வி.எம்., மேனேஜ்மென்ட் சிஸ்டம் 2.0 என்ற நவீன மென்பொருள் மூலம், இரண்டாம் தற்செயல் கலப்பு முறையில் இந்த இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

புதுச்சேரி, மாகே மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களில் இரண்டாம் தற்செயல் கலப்பு நேற்று நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஓட்டுச்சாவடி வாரியாக ஒதுக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் (இ.வி.எம்) மற்றும் வி.வி.பி.டி., ஆகியவற்றின் பட்டியல் மற்றும், இருப்பு இயந்திரங்களின் பட்டியலும் போட்டியிடும் வேட்பாளர்கள், பிரதிநிதிகள் என அனைவருக்கும் வழங்கப்பட்டன.

ஓட்டுப்பதிவு நாளன்று, ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பி.டி., இயந்திரங்களும் அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us