/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு: ஸ்டிராங் ரூமில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு தீவிரம்
/
லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு: ஸ்டிராங் ரூமில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு தீவிரம்
லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு: ஸ்டிராங் ரூமில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு தீவிரம்
லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு: ஸ்டிராங் ரூமில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு தீவிரம்
ADDED : ஏப் 09, 2024 05:11 AM

புதுச்சேரி: லோக்சபா தேர்தலுக்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் தற்செயல் கலப்பு முறையில் முழுவதுமாக ஒட்டுச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.இந்த ஓட்டு பதிவு இயந்திரங்கள் இன்று முதல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட உள்ளன
புதுச்சேரி லோக்சபா தேர்தலில், 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு மின்னணு ஓட்டு பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளர்கள், 1 நோட்டோ என 16 வேட்பாளர்கள் பெயர்கள் மட்டுமே இடம் பெற முடியும்.
இதனால், இந்த லோக்சபா தேர்தலில் இரண்டு ஓட்டுபதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள் ளன. லோக்சபா தேர்தலுக்கு, 967 ஓட்டுச்சாவடி களில் 1934 ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 967 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளது.
தேர்தலுக்காக, இந்திய தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் கணிணி மூலம் தற்செயல் கலப்பு முறையில் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
இதற்காக 19.03.2024 மற்றும் 02.04.2024 ஆகிய தேதகளில் முதல் மற்றும் முதல் துணை தற்செயல் கலப்பு நடந்தது.
அதில் 2318 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 1159 மின்னணு இயந்திரங்கள் மற்றும் 1360 வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, இரண்டாம் தற்செயல் கலப்பு ஒதுக்கீடு இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட காவல் பார்வையாளர் அமர்தீப் சிங் ராய், மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் முன்னிலையில் நேற்று நடந்தது. 15 நிமிடங்களில் மொத்தமுள்ள 30 சட்டசபை தொகுதிகளில் உள்ள 967 ஓட்டுச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொடர்ந்து, ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள், தேர்தல் முகவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. ஒரிரு தினங்களில் ஓட்டுச்சாவடி ரீதியாக ஒதுக்கப்பட்ட மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட உள்ளது.
ஓட்டுச்சாவடிக்கு செல்லும்போது இந்த பட்டியல் கொண்டு,ஒதுக்கப்பட்ட மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் தான் வந்துள்ளதா என்பதை அரசியல் கட்சியினர் சரிபார்த்து உறுதி செய்துகொள்ளலாம்.
இன்று பயணம்
வெகு தொலைவில் உள்ள மாகி, ஏனாம் பிராந்தியங்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் இன்று 9ம் தேதி அனுப்பப்பட உள்ளது. ஒட்டு பதிவு இயந்திரத்தினை பாதுகாப்பாக கொண்டு செல்ல தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநில போலீசாரின் உதவியை தேர்தல் துறை கேட்டுள்ளது.
எனவே, புதுச்சேரி போலீசார், பிற மாநில போலீசாரின் உதவியுடன் காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமிற்கு கொண்டு செல்ல உள்ளனர்.
வேட்பாளர் பட்டியல்
வரும் 11, 12 ஆகிய இரு தேதிகளில் மின்னணு ஒட்டுப்பதிவு இயந்திரங்கள் நான்கு பிராந்தியங்களிலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் ஒட்டி தயார் செய்யப்பட உள்ளது.
இதற்காக பெங்களூரில் இருந்து பெல் நிறுவனத்திலிருந்து 60 சர்வீஸ் பொறியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
ஓட்டு பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் பட்டியல் ஒட்டிய பிறகு, ஒட்டு எண்ணிக்கைக்கான அமைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமிங் இவை கொண்டு செல்லபட்டு பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது.
தொடர்ந்து ஓட்டு பதிவு நடக்கும் 19 ம்தேதி முன்பாக இவை ஓட்டுச்சாவடிக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.

