ADDED : ஜூலை 15, 2025 09:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; மாணவர் நாள் விழாவையொட்டி, நடந்த கண்காட்சியில் ஆலங்குப்பம் அரசு தொடக்கப் பள்ளி சார்பில் மாற்று மருத்துவ அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.
புதுச்சேரியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, மாணவர் நாள் விழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி, நடந்த கண்காட்சியில், பள்ளி துணை ஆய்வாளர் வட்டம் 1, ஆலங்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி சார்பில் 'மாற்று மருத்துவம்' என்ற தலைப்பில் அரங்கம் அமைக்கப்பட்டது. அதில், ஒலி சிகிச்சை, விதை சிகிச்சை, அக்குபிரஷர் ஆகிய மாற்று மருத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
அரங்கை முதல்வர், அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, பாராட்டினர்.
அரங்கத்திற்கான ஏற்பாடுகளை பள்ளி துணை ஆய்வாளர் அனிதா தலைமையில் தலைமையாசிரியர் கமலா தேவி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.