/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் மாணவர் சங்க ஆலோசனை கூட்டம்
/
முன்னாள் மாணவர் சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : ஜன 02, 2025 06:38 AM

புதுச்சேரி: வேலுார் தொழில் நுட்ப பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் புதுச்சேரி கிளை ஆலோசனை கூட்டம் நடந்தது.
சங்க தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கி பேசினார். சங்க ஆலோசகர் ஜெயக்குமார், முனைவர் வெங்கடேசகுமார், பிரபாகர், ராகேஷ் உள்ளிட்ட பல முன்னாள் மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தனர்.
பாகூர் தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் முன்னாள் மாணவர் சங்கத்தின் மூலம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சமூகப் பணிகள் குறித்து விவரிக்கப்பட்டது. 2025ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு சமூக பணிகள் முன்மொழியப்பட்டது. மாதந்தோறும் ஒருமுறை சங்கத்தின் சந்திப்பு கூட்டம் நடத்தவும், நிரந்தரமாக சமூக சேவைகள் முன்னெடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.