தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முன்னாள் மாணவர்கள் கல்வி உபகரணம் வழங்கல்

முன்னாள் மாணவர்கள் கல்வி உபகரணம் வழங்கல்

முன்னாள் மாணவர்கள் கல்வி உபகரணம் வழங்கல்


ADDED : செப் 04, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சாரம் எஸ்.ஆர்.எஸ்., முன்னாள் மாணவர்கள் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி, சாரம் எஸ்.ஆர்.எஸ்., அரசு உயர்நிலைப் பள்ளியில் 1990ம் ஆண்டு படித்த மாணவர்கள் ஒன்றிணைந்து, எஸ்.ஆர்.எஸ் – 90 என்ற குழுவாக செயல்பட்டு வருகின்றனர். இந்த குழு தாங்கள் கல்வி பயின்ற பள்ளியின் வளர்ச்சிக்கும், தற்போது அங்கு பயிலும் மாணவ, மாணவிகளின் நலனுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அந்தவகையில் எஸ்.ஆர்.எஸ்.90 முன்னாள் மாணவர் குழு, பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் மற்றும் பேனா வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் பழனி தலைமை தாங்கினார். பள்ளியின் முன்னாள் ஆசிரியர் அண்ணாமலை வாழ்த்துரை வழங்கி, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us