/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜீவானந்தம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
ஜீவானந்தம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஜீவானந்தம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஜீவானந்தம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : டிச 28, 2024 05:38 AM
புதுச்சேரி : காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை 29ம் தேதி நடக்கிறது.
இது குறித்து, ஜீவானந்தம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் ஜெகஜோதி வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜீவானந்தம் அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு நாளை 29ம் தேதி காலை 10:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் ஜீவானந்தம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 20 முன்னாள் ஆசிரியர்களை கவுரவித்து, நினைவு பரிசுகள் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து, மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடல் நடக்கிறது. நிகழ்ச்சியில் ஜீவானந்தம் அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.