ADDED : பிப் 21, 2024 08:49 AM

பாகூர்: கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றமுன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பள்ளியின் வளர்ச்சிக்காக 30 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த 1999 -2000ம் ஆண்டில் 9 மற்றும் 10 ம் வகுப்பு படித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி துணை முதல்வர் கருணாகரன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் சத்தியவாணி வரவேற்றார். நிகழ்ச்சியில்,முன்னாள் மாணவர்கள், தங்களின் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.முன்னாள் மாணவர்களும், ஆசிரியர்களும் கடந்த கால பள்ளி நிகழ்வுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்.
முன்னாள் மாணவர்கள் சார்பில்,பள்ளியின் வளர்ச்சிக்காக 30 ஆயிரம் ரூபாயை,பள்ளி துணை முதல்வர் கருணாகரனிடம் வழங்கினர். வகுப்பு வாரியாக சிறந்து விளக்கிய மாணவ - மாணவிகளைஊக்கப்படுத்தும் விதமாக பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவையொட்டி, பள்ளி மாணவ -மாணவிகளின் சிலம்பம் செயல்முறை விளக்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

