/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமலோற்பவம் பள்ளியில் பாட்டுப் போட்டி பரிசளிப்பு
/
அமலோற்பவம் பள்ளியில் பாட்டுப் போட்டி பரிசளிப்பு
ADDED : டிச 15, 2024 06:23 AM

புதுச்சேரி : அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் மற்றும் அமலோற்பவம் லுார்து அகாடமி சார்பில் கிறிஸ்துமஸ் பாட்டுப்போட்டி அமலோற்பம் லுார்து அரங்கில் நடந்தது.
இதில், பில்லாபாங் உயர்நிலைப் பள்ளி, கிருஷ்ணசுவாமி வித்யா நிகேத சீனியர் செகண்டரி பள்ளி, புனித பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புனித பெத்தி செமினார் பள்ளி, புனித பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி, ஸ்டான்ட்ஸ்போர்ட் இன்டர்நேஷனல் மேல்நிலைப் பள்ளி, தி ஸ்டெடி எக்கோல் சர்வதேச பள்ளி ஆகிய 7 பள்ளிகள் பாட்டு போட்டிகளில் பங்கேற்றன. அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆன்டோனியோஸ் பிரிட்டோ வரவேற்றார். கிறிஸ்துமஸ் பாட்டு போட்டிக்கு திருச்சி அருட்தந்தை டெனீஷ், சென்னை அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
இதில், பில்லாபாங் உயர்நிலைப் பள்ளி முதல் பரிசு, தி ஸ்டெடி எக்கோல் சர்வதேச பள்ளி இரண்டாம் பிரிசு, புனித பெத்தி செமினார் பள்ளி மூன்றாம் பரிசு முறையே ரூ.10 ஆயிரம், 7 ஆயிரம், 4 ஆயிரம் என பெற்றனர்.
அமலோற்பவம் பள்ளி குழுமத்தின் நிறுவனர் லுார்துசாமி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். துாய இதய ஆண்டவர் பசிலிக்கா அருட்தந்தை பிச்சைமுத்து வாழ்த்தி பேசினார்.
இந்த ஆண்டிற்கான சுழற்கோப்பை பில்லாபாங் உயர்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. அமலோற்பவம் லுார்து அகாடமியின் பிளஸ் 1 மாணவர்கள் ஜெயரூஸ், ஜான் ைஷலோ ரவீந்திரா, ஸ்ரீராம் சத்யா சாய் ஜோதி மற்றும் சாதனாஸ்ரீ ஆகியோர் தொகுத்து வழங்கினர்.