/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேண்டு வாத்திய இசையில் அமலோற்பவம் பள்ளி முதலிடம்
/
பேண்டு வாத்திய இசையில் அமலோற்பவம் பள்ளி முதலிடம்
பேண்டு வாத்திய இசையில் அமலோற்பவம் பள்ளி முதலிடம்
பேண்டு வாத்திய இசையில் அமலோற்பவம் பள்ளி முதலிடம்
ADDED : டிச 20, 2025 06:34 AM

புதுச்சேரி: பேண்டு வாத்திய இசையில் அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி, மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறை சார்பில், பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான இசைக்குழு போட்டி, ஹைதராபத்தில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்தில் நடந்தது.
இதில் ஆண்கள் பைப் பேண்ட் பிரிவில், அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.
இந்த குழு ஒருங்கிணைப்பு, நேர்த்தி, இசை நுணுக்கத்துடன் நிகழ்த்திய பேண்டு வாத்திய இசை, நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களால் வரவேற்பு பெற்றது.
தொடர்ந்து ஹைதராபாத் வேளாண் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான பேண்டு வாத்திய இசைப் போட்டியில் தெலுங்கானா, தமிழ்நாடு, அந்தமான், நிக்கோபார் தீவுகள், கர்நாடாக, சத்தீஸ்கர் மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
இதில் அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி பேண்டு இசைக்குழு மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
வெற்றி பெற்ற மாணவர்களை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், மாநில திட்ட இயக்குநர் எழில் கல்பனா ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.
வெற்றி பெற்ற பேண்டு வாத்திய இசைக்குழுவினரை பள்ளியின் முதுநிலை முதல்வர் நிறுவனர் லுார்துசாமி பாராட்டினார்.

