/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய அளவில் அறிவியல் கண்காட்சி அமலோற்பவம் லுார்து அகாதமி முதலிடம்
/
தேசிய அளவில் அறிவியல் கண்காட்சி அமலோற்பவம் லுார்து அகாதமி முதலிடம்
தேசிய அளவில் அறிவியல் கண்காட்சி அமலோற்பவம் லுார்து அகாதமி முதலிடம்
தேசிய அளவில் அறிவியல் கண்காட்சி அமலோற்பவம் லுார்து அகாதமி முதலிடம்
ADDED : பிப் 15, 2024 05:04 AM

புதுச்சேரி : தேசிய அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் புதுச்சேரி அமலோற்பவம் லூர்து அகாதமி முதலிடம் பிடித்துள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் நொய்டா நகரில் மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் தேசிய அளவில்,சி.பி.எஸ்.இ.,பள்ளிகளுக்கிடையிலான தேசிய அறிவியல் கண்காட்சி நடந்தது.இதில், அமலோற்பவம் லூர்து அகாதமியின் பிளஸ்1 மாணவர்கள் பரணிதரன், தனுஷ் ஆகியோர் பங்கேற்று, தனித்துவமான, புதுமை நிறைந்த ஒருங்கிணைந்த இரும்பு அணி வலுவூட்டல் என்ற படைப்பினை சமர்பித்தனர்.
இது தேசிய அளவில் முதல் பரிசை வென்றது. இருவரும், கடந்தாண்டு டிசம்பரில் சென்னையில் உள்ள ஒமேகா இன்டர் நேஷனல் பள்ளியில் நடத்தப்பட்ட கண்காட்சியில் தங்களது அறிவியல் படைப்பினை வைத்த்திருந்தனர்.
இக்கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மத்திய அரசின்நற்சான்றிதழ், ரொக்கப்பரிசு வழங்கி கவுரவிப்பதோடு, மட்டுமல்லாமல் ராஷ்டிரிய பால் வைக்யானிக் பிரதர்ஷனி. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்இணைந்து நடத்தும் தேசிய அறிவியல் கண்காட்சி 2024இல் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.
சாதனை மாணவர்கள் பரணிதரன்,தனுஷ் ஆகியோரை பள்ளி நிறுவனர் லுார்துசாமி தலா 4 கிராம் தங்க நாணயத்தை பரிசாக வழங்கி பாராட்டினார்.
பள்ளி நிறுவனர் லுார்துசாமி கூறும்போது, அமலோற்பவம் லுார்து அகாதமியின் முழு அர்ப்பணிப்புடனான கற்பிக்கும் திறனால் மாணவர்களின் படைப்பாற்றல், விடாமுயற்சி, புதியசிந்தனை, அறிவாற்றல், மாணவர் திறன் வெளிப்பட்டிருக்கிறது.இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறினார்.

