தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வினாடி வினா போட்டியில் அமலோற்பவம் பள்ளி சாதனை

வினாடி வினா போட்டியில் அமலோற்பவம் பள்ளி சாதனை

வினாடி வினா போட்டியில் அமலோற்பவம் பள்ளி சாதனை


ADDED : பிப் 26, 2024 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 05:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வினாடி வினா போட்டிகளில் அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

புதுச்சேரி, புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டி நடந்தது. இளம் சிறார்கள் பிரிவில் அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவர்கள் மரிய ஜோசப் பேட்ரிக், சைமன் இரண்டாமிடம், அமலோற்பவம் லுார்து அகாடமியை சேர்ந்த ராம்சிவா, மைந்துருவன் மூன்றாமிடம் பிடித்தனர்.

சிறார் பிரிவில் 8ம் வகுப்பு மாணவர்கள் முகம்மது அஷ்பக், ருக் ஷன் மூன்றாமிடம், லுார்து அகாடமி ஹரிஹரசுதன், லனேஷ்ராகவன் இரண்டாமிடம் பெற்றனர்.

சூப்பர் சீனியர் பிரிவில் பிளஸ் 1 மாணவர்கள் ருதீரேஸ்வரன், ராகவ் முதலிடம் பிடித்தனர். லுார்து அகாடமி பூவராகவன், நவீனப்ரியன் மூன்றாமிடம் பிடித்தனர்.

இதில், 2023--24ம் ஆண்டிற்கான சுழற்கோப்பையை அமலோற்பவம் பள்ளி வென்றது.

இதேபோல், புதுச்சேரி மணக்குள விநாயகர் கல்லுாரியில் 2023--24ம் ஆண்டிற்கான வினாடி- வினா போட்டிகள் நடந்தது. சீனியர் பிரிவில் அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் ருதீரேஸ்வரன், ராகவ் முதலிடம் பெற்று சுழற்கோப்பையை வென்றனர்.

லுார்து அகாடமி லோகேந்திரா, சதீஷ்குமார் ஆகியோர் ஜூனியர் பிரிவில் மூன்றாமிடம் பிடித்தனர். சீனியர் பிரிவில் பூவராகவன், நவீனப்ரியன் ஆகியோர் இரண்டாமிடம் பிடித்தனர். வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளி நிறுவனர் லுார்துசாமி பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us