/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டிக்கு அமலோற்பவம் பள்ளி மாணவர் தேர்வு
/
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டிக்கு அமலோற்பவம் பள்ளி மாணவர் தேர்வு
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டிக்கு அமலோற்பவம் பள்ளி மாணவர் தேர்வு
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டிக்கு அமலோற்பவம் பள்ளி மாணவர் தேர்வு
ADDED : மே 11, 2025 01:14 AM

புதுச்சேரி: சீனாவில் நடக்கும் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் இந்தியா சார்பில், பங்கேற்க, புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவர் தேர்வாகியுள்ளார்.
சர்வதேச விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் ஜூலை 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை சீனாவின் செங்குடு நகரில் நடக்கிறது.
இதில், இந்தியாவின் ஸ்கேட்டிங் பிரிவில் பங்கேற்க 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், ஒருவராக புதுச்சேரி அமலோற்பவம் பள்ளியின் பிளஸ் 1 மாணவர் சாரதி தேர்வாகி உள்ளார்.
2ம் வகுப்பு முதல் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வரும் இவரின் விடாமுயற்சியால், மாநில அளவில் முன்னேறி, படிப்படியாக தேசிய அளவிலான போட்டியிலும் முத்திரை பதித்துள்ளார்.
அதன்படி, கடந்த ஏப்ரல் 17ம் தேதி நடந்த இந்திய ரோலர் ஸ்கேட்டிங் கூட்டமைப்பின் தேசிய அளவிலான தகுதிச் சுற்று தேர்வுகளில் நாடு முழுதும் இருந்து பல்வேறு போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் சிறந்த 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சேலம் இன்லைன் ப்ரீ ஸ்டைல் ஸ்பீட் ஸ்கேட்டிங் பிரிவில் இந்தியாவின் சார்பில், பங்கேற்கும் தகுதியை, புதுச்சேரி அமலோற்பவம் பள்ளியைச் சேர்ந்த மாணவன்சாரதி பெற்றார்.
சர்வதேச விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு முன்னோட்டமாக மே மற்றும் ஜூன் மாதத்தில் நடக்கும் தேசிய ஸ்கேட்டிங் பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளார்.
மாணவர் சாரதியை பள்ளியின்நிறுவனர் லுார்துசாமி வாழ்த்தி, பயண செலவிற்காக ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்.