அமலோற்பவம் லுார்து அகாடமி பள்ளி சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் சென்டம்
அமலோற்பவம் லுார்து அகாடமி பள்ளி சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் சென்டம்
ADDED : மே 15, 2026 02:50 AM

புதுச்சேரி: புதுச்சேரி அமலோற்பவம் லுார்து அகாடமி பள்ளி 2வது முறையாக சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளியில் தேர்வு எழுதிய 208 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 208 மாணவர்களில் 205 பேர் டிஸ்டிங்க் ஷனில் தேர்வாகியுள்ளனர். 3 மாணவர்கள் 70 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மாணவர் ராகுல் 500க்கு 491 மதிப்பெண்களுடன் முதலிடம், மாணவர் கிரிஷாந்த் அபினவ் 486 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம், மாணவி கிருத்திக் ஷா 485 மதிப்பெண்களுடன் மூன்றாமிடம் பெற்றனர்.
475 மதிப்பெண்களுக்கு மேல் 17 மாணவர்கள் பெற்றுள்ளனர். 450 முதல் 474 மதிப்பெண்கள் வரை 34 பேரும், 425 மதிப்பெண்கள் முதல் 449 வரை 72 பேரும், 400 மதிப்பெண்கள் முதல் 424 வரை 54 பேரும் பெற்றுள்ளனர்.
கணித பாடத்தில் 2 பேரும், பி.ஏ.டி., பாடத்தில் 22 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 90 மதிப்பெண்களுக்கு மேல் ஆங்கிலத்தில் 111 பேரும், கணிதத்தில் 38, இயற்பியலில் 5, வேதியலில் 58, உயிரியலில் 38, கணனி அறிவியலில் 45, பி.ஏ.டி., பாடத்தில் 205 பேரும் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவிகளை அமலோற்பவம் பள்ளி தாளாளர் லுார்துசாமி சால்வை அணிவித்து பாராட்டினார்.
அவர் கூறுகையில், 'முதலிடம் பிடித்த மாணவருக்கு 3 கிராம் தங்க நாணயம், இரண்டாமிடம் பிடித்த மாணவருக்கு 2 கிராம் தங்க நாணயம், மூன்றாமிடம் பிடித்த மாணவிக்கு 1 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்' என்றார்.
