தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தட்டாஞ்சாவடி வினோபா நகரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா  

தட்டாஞ்சாவடி வினோபா நகரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா  

தட்டாஞ்சாவடி வினோபா நகரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா  


ADDED : ஏப் 15, 2026 10:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 10:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ஜெய்பீம் இயக்கம் சார்பில், அம்பேத்கர் 135வது பிறந்தநாள் விழா தட்டாஞ்சாவடி வினோபா நகர் புது தெருவில் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, சங்க தலைவர் கலைவேந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் மீட்பரசன், துணை தலைவர் ரகு (எ) ரகுராமன், மகளிரணி தலைவர் கலைராணி, மோகனாம்பாள், பொருளாளர் ஆனந்த சேகரன் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் கலைமாறன் பங்கேற்று, அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கணேஷ், ரெஜிஸ், சரவணன், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், வினோபா நகர் பிச்சவேல், ஜார்ஜ், பாஸ்டர் சண்முகம் ஆகியோர் அம்பேத்கரின் போதனைகள் மற்றும் சாதனைகள் குறித்து பேசினர்.

தொடர்ந்து வினோபா நகர் புது தெருவில் அமைத்திருந்த அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். வினோபா நகர மக்கள், சமூக ஆர்வலர்கள், கிறிஸ்துவ பஞ்சாயத்தார்கள், ஊர் பஞ்சாயத்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் 200க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறி வழங்கப்பட்டது.

முன்னதாக அனைவரும், அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றி சமூக ஒற்றுமையுடன் வாழ உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us