தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வழங்கல் 

 அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வழங்கல் 

 அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வழங்கல் 


ADDED : பிப் 15, 2026 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 06:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, மெட்ராஸ் ஆங்க்ரேஜ் ரவுண்ட் டேபிள் நிறுவனம் சார்பில், ஆம்புலன்ஸ் இலவசமாக வழங்கும் விழா நடந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமை தாங்கினார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். ரவுண்ட் டேபிள் பகுதி ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ்வரன் வரவேற்றார். தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் சீனு மோகன்தாசு ஒருங்கிணைப்பு செய்தார்.

சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஷம்முனிசா பேகம், மார்ட் 100 தலைவர் பிரவேஷ் ஜெயின், ரவுண்ட் டேபிள் பகுதி செயலாளர் அசோக், ரவுண்ட் டேபிள் உறுப்பினர்கள் சார்லஸ் டேனியல், மணிபாரதி, லட்சுமி நாராயணன், வில்லியனுார் மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி பாமகள் கவி ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

இதில், ரூ. 10 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் இலவசமாக மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

விழாவில், தி.மு.க. தொகுதி செயலாளர்கள் மணிகண்டன், இளஞ்செழியன் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், அவைத்தலைவர் ஜலால் ஹனீப், அணி அமைப்பாளர்கள் ரமணன், குலசேகரன், செல்வநாதன், தொ.மு.ச., தலைவர் அங்காளன், துணை அமைப்பாளர்கள் சரவணன், காசிநாதன், கோபி, காளி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us