ADDED : செப் 25, 2026 11:55 PM
புதுச்சேரி: ராஜிவ் சிக்னலில் ஆம்புலன்ஸ் செல்ல வழியின்றி 20 நிமிடங்கள் நின்று சென்றது.
புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், நேற்று நகரின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி ராஜிவ் சிக்னல் அருகே நேற்று இரவு போக்குவரத்து ஸ்தம்பித்தது. அப்போது, நோயாளி ஒருவருடன் அவசரமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ், இந்த கடுமையான நெரிசலில் சிக்கிக் கொண்டது.
சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக ஆம்புலன்ஸ் அங்குமிங்குமாக தட்டித் தடுமாறி, மெதுவாகவே நெரிசலைக் கடந்து செல்ல முடிந்தது. முக்கிய சந்திப்பான ராஜிவ் சிக்னல் பகுதியில் போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தபோதிலும், வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து காணப்பட்டதால் நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
வார இறுதி நாட்களில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களைக் முறைப்படுத்த சிறப்பு போக்குவரத்து திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
