/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமெரிக்க தமிழ் மாநாட்டு பேரவை புதுச்சேரியில் 'லோகோ' வெளியீடு
/
அமெரிக்க தமிழ் மாநாட்டு பேரவை புதுச்சேரியில் 'லோகோ' வெளியீடு
அமெரிக்க தமிழ் மாநாட்டு பேரவை புதுச்சேரியில் 'லோகோ' வெளியீடு
அமெரிக்க தமிழ் மாநாட்டு பேரவை புதுச்சேரியில் 'லோகோ' வெளியீடு
ADDED : பிப் 08, 2024 05:08 AM

புதுச்சேரி: அமெரிக்க தமிழ் மாநாட்டு பேரவையின் லோகோ புதுச்சேரியில் வெளியிடப்பட்டது.
அமெரிக்காவில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை உள்ளது. இதனை அந்நாட்டில் உள்ள 60 தமிழ்ச்சங்கங்கள் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. ஆண்டுதோறும் பேரவை மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டில் வரும் ஜூலை 5, 6 மற்றும் 7ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் பேரவையின் 37 வது மாநாடு அமெரிக்க டெக்சாஸ் மாகாணம் சான் ஆண்டோனியோவில் நடக்க உள்ளது.
மாநாட்டுக்கான இலச்சினையில் முதன்முறையாக புதுச்சேரி மாநில அரசு சின்னமான ஆயி மண்டபம் இடம் பெற்றுள்ளது. அதையடுத்து மாநாட்டு லோகோ வெளியிடும் நிகழ்ச்சி புதுச்சேரி கிரீன்பேலஸ் ஓட்டலில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் பாலாசுவாமிநாதன் தலைமை தாங்கினார். புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து மாநாட்டு லோகோ வெளியிட்டார்.
அவர், கூறியதாவது:
உலகத் தமிழர்கள் கூடும் அமெரிக்க சான் ஆண்டோனியோ தமிழ்ச்சங்கப் பேரவை மாநாட்டில் புதுச்சேரியிலிருந்து கலைஞர்கள், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்பர் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மாநாட்டு லோகோவில் புதுச்சேரி ஆயி மண்டபம் இடம் பெற்றிருப்பது புதுச்சேரி மக்களுக்கு உலகத் தமிழர்களால் அளிக்கப்பட்ட கவுரவமாகும்' என்றார்.
நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான பேரவை இயக்குனர் ரவிகுணவதி மைந்தன், அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை முன்னாள் தலைவர் ஆண்டி கிரி மற்றும் சேகர் சுவாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

