UPDATED : அக் 13, 2026 08:42 PM
ADDED : அக் 13, 2026 08:06 PM

புதுச்சேரி: சாரதாம்பாள் கோவிலில் 52ம் ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி, அம்மனுக்கு நடந்த சிறப்பு அபிேஷகத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
எல்லைப்பிள்ளைச்சாவடி, 100 அடி சாலையில் உள்ள சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில், நவராத்திரி விழா, கடந்த 11ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.
அதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் மகா ருத்ர ஹோமம் மற்றும் சுயம்வரா பார்வதி ஹோமம் (கந்தர்வ ராஜ ஹோமம்) நடந்தது.
நேற்று காலை துர்கா சூக்த ஹோமம் மற்றும் காயத்திரி ஹோமத்தை அடுத்து மாலையில், அம்மனுக்கு சிறப்பு அபிேஷம் நடந்தது. பின், தீபாராதனையில், பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, பக்த மீரா குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி, சத்ய சாயி சேவா சமிதி சார்பில் சாயி பஜன் நிகழ்ச்சி நடந்தது.
