ADDED : அக் 03, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : கோவில் உண்டியல் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலையில், செட்டிக்குளம் பகுதியில் நாக முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில், கோவிலில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிச்சென்ற பார்த்தபோது மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்துக்கொண்டிருந்ததனர். அவர்கள் பொதுமக்களை பார்த்ததும் தப்பியோடிவிட்டனர். பொதுமக்கள் சென்றதால் உண்டியலில் இருந்து பணம் தப்பியது.
புகாரின் பேரில் அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்தனர். மேலும், உண்டியலை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.