/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அ.ம.மு.க., சட்ட விரோத பேனர்கள் வைத்து அட்டூழியம் பொதுமக்களின் எதிர்ப்பால் அதிரடியாக அகற்றம்
/
அ.ம.மு.க., சட்ட விரோத பேனர்கள் வைத்து அட்டூழியம் பொதுமக்களின் எதிர்ப்பால் அதிரடியாக அகற்றம்
அ.ம.மு.க., சட்ட விரோத பேனர்கள் வைத்து அட்டூழியம் பொதுமக்களின் எதிர்ப்பால் அதிரடியாக அகற்றம்
அ.ம.மு.க., சட்ட விரோத பேனர்கள் வைத்து அட்டூழியம் பொதுமக்களின் எதிர்ப்பால் அதிரடியாக அகற்றம்
ADDED : ஜன 18, 2025 06:40 AM

புதுச்சேரி : நகரம் முழுவதும் நேற்று ஒரே நேரத்தில் சாலைகளில் சட்ட விரோத பேனர்களை வைத்து அட்டூழியம் செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பினை தொடர்ந்து இந்த பேனர்கள் அதிரடியாக அகற்றப்பட்டன.
நீதிமன்றம் தலையிட்ட பிறகு புதுச்சேரியில் பேனர் கலாசாரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை பேனரை கட்டுப்படுத்த எடுத்த ஒட்டுமொத்த முயற்சிகளை கேலி கூத்தாகும் வகையில் நேற்று ஒரே நேரத்தில் அனைத்து முக்கிய சாலைகளில் சட்ட விரோத பேனர்களை வைத்து அட்டூழியம் செய்யப்பட்டு இருந்தது.
புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவிற்கு அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் வருகை தந்தார். அவரை வரவேற்று, தான் இந்த சட்ட விரோத பேனர்கள் சகட்டு மேனிக்கு போக்குவரத்திற்கு இடையூராக வைக்கப்பட்டது.
குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த கிழக்கு கடற்கரை சாலை, விழுப்புரம் சாலை, மறைமலையடிகள் சாலை சென்டர் மீடியன்களில் அனுமதியின்றி, சகட்டுமேனிக்கு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலைகளையும் குதறி போட்டு, கழிகளை நட்டு பேனர்களை கட்டி இருந்தனர். மின்கம்பங்களையும் விடவில்லை. அதிலும் அலங்கார பேனர்களை கட்டி, விசாலமான சாலைகளை குறுக செய்திருந்தனர். இந்த பேனர்களால், அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதிரடியாக அகற்றம்
பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து பொதுப்பணித் துறை நெடுஞ்சாலை கோட்ட அதிகாரிகள் ஒருவழியாக இந்த சட்ட விரோத பேனர்களை அதிரடியாக அகற்றி, அள்ளி சென்றனர்.
இந்த சட்ட விரோத பேனர்களின் சம்பந்தப்பட்ட நகராட்சி, நெடுஞ்சாலையிடம் அனுமதி பெற்றதற்கான எந்த ஆணை ஒட்டப்படவில்லை. எந்த அச்சகத்தில் அடிக்கப்பட்டது என்ற தகவலும் இடம் பெறவில்லை. மொட்டையாக சட்ட விரோதமாக துணிச்சலாக வைக்கப்பட்டுள்ளது.
எனவே, அத்துமீறி பேனர்கள் வைத்தவர்கள் மட்டுமின்றி, அந்த பேனரை அச்சடித்த அச்சகத்தின் மீதும் போலீசில் புகார் அளித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மற்ற கட்சிகளும் அடுத்து பேனர்களை வைக்க யோசிப்பர்.