தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது

மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது

மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது


ADDED : பிப் 17, 2025 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 05:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்; மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 38 வயது பெண், கடந்த மாதம் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, திருமணமாகாத நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இது குறித்து மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக, கிருமாம்பாக்கம் போலீசார், கடந்த மாதம் பாலியல் வன்புணர்வு பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வந்தனர்.

கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தேவராஜ், 65, என்ற முதியவர் அப்பெண்ணை கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது,அப்பெண் விறகு பொறுக்க வந்ததாகவும், அவரிடம் நைசாக பேசி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, கிருமாம்பாக்கம் போலீசார் தேவராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலப்பட்டு சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us