/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உறுவையாறு கழிவுநீர் வாய்க்கால் நடுவில் இருந்த மின்கம்பம் அகற்றப்பட்டது

ADDED : நவ 05, 2024 06:41 AM

வில்லியனுார்: வில்லியனுார் பாகூர் மெயின்ரோடு உறுவையாறு ஜெயம் நகர் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் நடுவே இருந்த மின் கம்பம் அகற்றி புதிய மின் கம்பத்தில் இணைப்புகள் கொடுத்து சரிசெய்தனர்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை சாலை மற்றும் கட்டடங்கள் தெற்கு கோட்டம் சார்பில் வில்லியனுார்-பாகூர் மெயின்ரோடு உறுவையாறு முதல் சங்கராபரணி ஆற்றங்கரை வரையில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில் உறுவையாறு ஜெயம் நகர் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியில் சாலையோரம் உள்ள மின் கம்பத்தை அகற்றாமல் உள்ளே வைத்து கழிவுநீர் வாய்க்கால் அமைத்தனர்.
இதனை சமூக ஆர்வர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
மேலும் 'தினமலர்' படத்துடன் செய்தி வெளியிட்டது. அதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை சாலை மற்றும் கட்டடங்கள் கோட்ட செயற்பொறியாளர் சந்திரகுமார் உத்தரவின்பேரில் உதவி பொறியாளர் கோபி மற்றும் இளநிலைப் பொறியாளர் நடராஜன் ஆகியோர் மின்துறை ஊழியர்கள் அதிரடியாக கழிவுநீர் வாய்க்கால் பக்கத்தில் புதிய மின் கம்பம் அமைத்து அதில் மின் இணைப்புகளை கொடுத்தனர். பின்னர் கழிவுநீர் வாய்க்கால் நடுவே இருந்த மின் கம்பம் அகற்றினர்.