/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மசாஜ்க்கு ஆசைப்பட்டு, ரூ.30 ஆயிரம் இழந்த தனியார் கம்பெனி ஊழியர்
/
மசாஜ்க்கு ஆசைப்பட்டு, ரூ.30 ஆயிரம் இழந்த தனியார் கம்பெனி ஊழியர்
மசாஜ்க்கு ஆசைப்பட்டு, ரூ.30 ஆயிரம் இழந்த தனியார் கம்பெனி ஊழியர்
மசாஜ்க்கு ஆசைப்பட்டு, ரூ.30 ஆயிரம் இழந்த தனியார் கம்பெனி ஊழியர்
ADDED : அக் 18, 2024 06:17 AM
புதுச்சேரி: மசாஜ்க்கு ஆசைப்பட்டு, 30 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மோசடி கும்பலிடம் தனியார் கம்பெனி ஊழியர் இழந்தார்.
புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் பிரவீன். தனியார் கம்பெனி ஊழியர். இவர், கடந்த 29ம் தேதி மசாஜ் செய்து கொள்வதற்கான, ஆன்லைனில் மசாஜ் சென்டர் தேடினார். ஆன்லைனில் கால் கேர்ள் விளம்பரத்தை பார்த்துள்ளார்.
அதில், ஒரு மொபைல் எண் மற்றும் ஐபை மாடல் ஒரு மணி நேரத்திற்கு ரூ.6 ஆயிரம், ஒரு நாள் முழுதும் ரூ.15 ஆயிரம் மற்றும் கால் கேர்ள் ஒரு மணி நேரத்திற்கு ரூ.3 ஆயிரம், ஒரு நாள் முழுதும் ரூ.10 ஆயிரம் என சில பெண்களின் புகைப்படங்கள் இருந்துள்ளது.
இதையடுத்து, பிரவீன் அதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, எதிர்முனையில் பேசிய நபர் முன்பணம் செலுத்தினால், அனைத்து ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறியுள்ளார்.
இதைநம்பிய பிரவீன் ரூ.500 அனுப்பியத்தை அடுத்து, மசாஜ் செய்வதற்கு பெண்களை அனுப்ப போக்குவரத்து செலவு ரூ.1,500 மற்றும் முழு தொகையை உடனடியாக அனுப்பும்படி மர்மநபர் கூறினார்.
இதை நம்பி பிரவீன் முழுதொகையான 30 ஆயிரம் ரூபாயை அனுப்பினார். பணம் அனுப்பிய 3 மணி நேரம் ஆகியும், மர்ம நபரிடம் இருந்து எந்தவித தகவலும் வராததால், சந்தேகமடைந்த பிரவீன் மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது, போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
அதன்பிறகே பிரவீனுக்கு மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது. இதுகுறித்து பிரவீன் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.