/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூலிகை மற்றும் சிறுதானிய பயன்கள் குறித்த கண்காட்சி
/
மூலிகை மற்றும் சிறுதானிய பயன்கள் குறித்த கண்காட்சி
மூலிகை மற்றும் சிறுதானிய பயன்கள் குறித்த கண்காட்சி
மூலிகை மற்றும் சிறுதானிய பயன்கள் குறித்த கண்காட்சி
ADDED : அக் 30, 2024 04:33 AM
வில்லியனுார் : புதுச்சேரி ஆயுர்வேத மருத்துவ இயக்குனரகம் சார்பில், வில்லியனுார் ஆயுஷ் மருத்துவமனையில் மூலிகை மற்றும்சிறுதானிய பயன்கள் குறித்த கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சொர்ண பிரஷன் சொட்டுக்களை வழங்கினார்.
மேலும் பிறந்த குழைந்தைகளை ஆயுர்வேத முறைப்படி பராமரிப்பது குறித்தபுத்தகம், 27 நட்சத்திர மூலிகை மற்றும் அதன் பயன்பாடுகள், சிறுதானிய பயன்பாடுகள், நோய் தீர்க்கும் முறை, ஒற்றை மூலிகைகள் கொண்டு நோய் தீர்க்கும் முறை குறித்த அட்டவணையை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் ஆயுர்வேத நோடல் அதிகாரி பத்மாவதம்மா, இயக்குநர் ஸ்ரீதரன், மருத்துவ கண்காணிப்பாளர் இந்திரா, ஆயுஷ் மருத்துவமனை மருத்துவ உள்ளிருப்பு அதிகாரி பிரசன்ன லட்சுமி, ஆயுர்வேத மருத்துவர் ஜீவாஆனந்த், மருத்துவர்கள், ராஜிவ்காந்தி ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

