/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு; 22 நாட்களில் 178 பேர் பாதிப்பு
/
டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு; 22 நாட்களில் 178 பேர் பாதிப்பு
டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு; 22 நாட்களில் 178 பேர் பாதிப்பு
டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு; 22 நாட்களில் 178 பேர் பாதிப்பு
ADDED : செப் 24, 2024 06:24 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பால், கடந்த 22 நாட்களில் 178 பேர் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.
கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் புதுச்சேரியில் சமீப காலமாக மிக வேகமாக பரவி வருகிறது.
புதுச்சேரி நகரம் மற்றும் கிராமங்களில் சமீப காலமாக காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட் டோரின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலரின் ரத்த மாதரியை சேகரித்து ஆய்வு செய்ததில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவோரின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில், தினசரி 50க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவது தெரிய வந்தது. மேலும் சிக்குன்குனியா, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவி வருவது உறுதியாகி உள்ளது.
மாநிலத்தில் இந்தாண்டில் நேற்று முன்தினம்வரை 1,270 பேர் டெங்கு காய்ச்சலாலும், 228 பேர் சிக்குன்குனியாவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 22 நாட்களில் 178 பேர் பாதிப்பிற்கு டெங்கு காய்ச்சலால பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவலை தடுக்க பொதுப்பணி, உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறைகள் இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும்.