தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணவெளி தொகுதியில் அல்லாடும் அனந்தராமன்

 மணவெளி தொகுதியில் அல்லாடும் அனந்தராமன்

 மணவெளி தொகுதியில் அல்லாடும் அனந்தராமன்


ADDED : மார் 28, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 05:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மணவெளி தொகுதியில் 'இண்டி' கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள காங்., வேட்பாளர் அனந்தராமன், கூட்டணி கட்சியினரின் கடும் அதிருப்தி காரணமாக அல்லாடிக் கொண்டுள்ளார்.

புதுச்சேரி, மணவெளி தொகுதியில் 'இண்டி' கூட்டணி சார்பில் காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து தே.ஜ., கூட்டணியில் பா.ஜ., சார்பில் தற்போதைய சபாநாயகர் செல்வம் போட்டியிடுகிறார். மேலும், த.வெ.க.,- நாம் தமிழர் கட்சி., - பா.ம.க., - சுயேச்சைகள் என 7 பேர் களத்தில் உள்ளனர்.

இத்தேர்தலில் போட்டியிடும் காங்., அனந்தராமன், பா.ஜ.,-செல்வம், நா.த.க., இளங்கோவன் ஆகிய மூவரும் கடந்த தேர்தலில் போட்டியிட்டவர்களாவர். இவர்களில் பா.ஜ.,வை சேர்ந்த செல்வம் பதிவான மொத்த ஓட்டுகளில் 57.74 சதவீதமான 17,225 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட அப்போதைய ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,வான அனந்தராமன் 30.37 சதவீதமான 9,095 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். இதற்கு முக்கிய காரணம், கடந்த 2016 தேர்தலில் வெற்றி பெற்ற இவர், தொகுதிக்கு என எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு திட்டங்களை செயல்படுத்தவில்லை. அந்த அதிருப்தியே கடந்த தேர்தலில் அவரை படுதால்வி அடைய வைத்தது.

ஆனால், அவரே தற்போது நான்காம் முறையாக இத்தொகுதியில் போட்டியிடுகிறார். தொகுதிக்கு அறிமுகமானவர் என்ற போதிலும், தொகுதி பிரச்னைகளுக்கு கவனம் செலுத்தாது பெரும் குறையாக உள்ளது.

மேலும், இவர் சார்ந்த காங்., கட்சி கூட்டணி கோட்பாடுகளை மீறி, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் தனியாக போட்டியிடுவதால், தி.மு.க., - இந்திய கம்யூ., மற்றும் வி.சி., கட்சியினர் காங்., மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கூட்டணி கட்சிகளின் இந்த அதிருப்தி அனந்தராமனை அல்லாட வைத்துள்ளது. மேலும், நடிகர் விஜய் கட்சியான த.வெ.க., சார்பில் தொகுதிக்கு நன்கு அறிமுகமான ராமு களம் இறங்கியுள்ளார். இவர், ​இளைஞர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களை ஈர்த்து வருகிறார். அதேபோன்று இத்தொகுதியில், தனி ஓட்டு வங்கி வைத்துள்ள பா.ம.க., மற்றும் நாம் தமிழர் கட்சிகள் பெறும் ஒவ்வொரு ஓட்டுகளும், காங்., வேட்பாளர் அனந்தராமனுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. மொத்தத்தில் மணவெளி தொகுதி தேர்தல் களத்தில் இறங்கியுள்ள அனந்தராமன், கரையேற அல்லாடிக் கொண்டுள்ளார். கரையேறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us