/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
/
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
ADDED : நவ 12, 2024 07:59 AM
புதுச்சேரி: வரும் சட்டசபை தேர்தலில்,புதுச்சேரி மக்கள் அ.தி.மு.க.,விற்கு வாய்ப்பளிப்பார்கள் என மாநில செயலாளர் அன்பழகன் பேசினார்.
உப்பளத்தில் நடந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தி அவர் பேசியதாவது:
கட்சியின் பொதுச் செயலாளர் உத்தரவின்படி, புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டைகளை உரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் விடுபட்ட மற்றும் புதிய வாக்காளர்களை சேர்த்திட வேண்டும். பெண்களை உள்ளடக்கிய பூத் கமிட்டி அமைக்க வேண்டும்.
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. சுற்றுலா என்ற பெயரில் கலாசாரம் சீரழிக்கப்படுகிறது. வெளி மாநில சுற்றுலா பயணிகளால் நம் மாநில மக்கள் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு அறிவித்த ரூ. 500 மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்ட பயன்கள் இன்னமும் மக்களை சென்றடையவில்லை.
அரசு அறிவிக்கும் திட்டங்கள் தனி மனித வருமானத்திற்கான திட்டங்களாக உள்ளது. மக்களுக்கு நல்லாட்சி தருவதில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு தோல்வி அடைந்துள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் புதுச்சேரி மக்கள் அ.தி.மு.க.,விற்கு வாய்ப்பளிப்பார்கள். அதற்கு நாம் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் என்றார்.
கூட்டத்தில், ஜெ., பேரவை பாஸ்கர், மாநில துணைத் தலைவர் ராஜாராமன், இணைச் செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு, பொருளாளர் ரவிபாண்டுரங்கன், நகர செயலாளர்கள், அன்பழகன், சித்தானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

