/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி முதல்வருக்கு அன்பழகன் கண்டனம்
/
மாஜி முதல்வருக்கு அன்பழகன் கண்டனம்
ADDED : மார் 24, 2025 04:16 AM
புதுச்சேரி: முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த கால தி.மு.க.,- காங்., கூட்டணி அரசின் முதல்வராக இருந்த நாராயணசாமி ஆட்சியில் மக்களுக்கு வழங்கப்பட்ட எந்தவொரு நலத்திட்ட உதவிகளிலும் ரூ.100 கூட உயர்த்தாமல் 5 ஆண்டுகால ஆட்சியை நடத்தினார்.
மேலும் கடந்த தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் விதவை, முதியோர் நலத்திட்ட உதவிக்கு புதியதாக விண்ணப்பித்தவர்களில் ஒருவருக்கு கூட வழங்கவில்லை. இதனை மக்கள் நினைவில் வைத்துள்ளனர்.
தொடர்ந்து மத்திய அரசையும் கவர்னரை எதிர்த்து ஆட்சியை நடத்தி புதுச்சேரி அரசியல் வரலாற்றில் தனது ஆட்சி என்பது இருண்ட ஆட்சியாக மாற்றியவர் தான் நாராயணசாமி.
தனது ஆட்சியில் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாத நாராயணசாமி தற்போதைய ஆட்சியை பற்றி தொடர்ந்து அவதூறாக பொய்யான தகவல்களை பேசி வருவது கண்டிக்கத்தக்கது.
அரசின் தவறுகளையும், முறைகேடுகளையும், மக்கள் விரோத திட்டங்களையும் சுட்டிக்காட்டும் கடமையும், பொறுப்பும் எதிர்கட்சிகளுக்கு உண்டு. அந்த வகையில் அவர் தனது குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் எடுத்துக்கூற முன்வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.