தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தே.ஜ., கூட்டணியில் தொடர்வோம் அடித்து சொல்கிறார் அன்பழகன்

 தே.ஜ., கூட்டணியில் தொடர்வோம் அடித்து சொல்கிறார் அன்பழகன்

 தே.ஜ., கூட்டணியில் தொடர்வோம் அடித்து சொல்கிறார் அன்பழகன்


ADDED : பிப் 22, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., தொடரும் என மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில், சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்திற்கு முழு முதல் காரணமாக அதிகாரிகளின் அலட்சியமே. அதிகாரிகள் திட்டமிட்டு அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்தகின்றனர். அனுமதி இல்லாமல் படகுகள் இயக்குவது குறித்து பல முறை புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தான் இந்த விபத்திற்கு காரணம்.

விபத்து ஏற்படுத்திய படகை தடை செய்வதற்கு பதிலாக ஒட்டுமொத்த படகு சவாரியையும் தடை செய்வது கண்டிக்கத்தக்கது. நிறுத்தப்பட்டுள்ள சுற்றுலா படகு போக்குவரத்தை மீண்டும் அனுமதிக்க வேண்டும்.

தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி அ.தி.மு.க., தலைமையில் உள்ளது. அந்த கூட்டணி புதுச்சேரியிலும் தொடரும். கூட்டணியை கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி முடிவு செய்வார்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us