தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அன்பழகன் பிறந்த நாள் அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

அன்பழகன் பிறந்த நாள் அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

அன்பழகன் பிறந்த நாள் அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்


ADDED : அக் 11, 2024 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2024 06:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடாடினார்.

அதனையொட்டி, அவரது தாய் கமலம்மாளிடம் ஆசி பெற்று, குடும்பத்தினருடன் கேக் வெட்டிய பின், ஏழை பெண்களுக்கு சேலை வழங்கினார். தொடர்ந்து முதலியார்பேட்டை, புவன்கரே வீதி, சக்திவேல் பரமானந்தா சித்தர் பீடத்தில் குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.

கட்சி நிர்வாகிகள் மாநில அவைத் தலைவர் அன்பானந்தன் தலைமையில், பொருளாளர் ரவி பாண்டுரங்கன் ஏற்பாட்டில் மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்தனர்.

தொடர்ந்து சுப்பையா சாலை, இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும், முல்லா வீதி தர்காவில் சிறப்பு தொழுகையும், கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் பூஜை செய்தனர்.

பிறந்த நாளையொட்டி அன்பழகன் நேற்று முன்தினம் கட்சியின் பொதுச் செயலாளரான பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அவருக்கு, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், என்.ஆர்.காங்., பொதுச்செயலாளர் ஜெயபால், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், ராஜாராமன், கோமளா, மாநில இணைச்செயலா ளர் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர்கள் மகாதேவி, கணேசன், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us