/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பக்திப் போர் தொடுத்தவள் ஆண்டாள்' : ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
/
'பக்திப் போர் தொடுத்தவள் ஆண்டாள்' : ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
'பக்திப் போர் தொடுத்தவள் ஆண்டாள்' : ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
'பக்திப் போர் தொடுத்தவள் ஆண்டாள்' : ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
ADDED : ஜன 05, 2024 06:37 AM
புதுச்சேரி, : முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் மார்கழி மாதத்தையொட்டி திருப்பாவையின் 19ம் பாசுரம் குறித்து நேற்று உபன்யாசம் செய்ததாவது:
திருப்பாவையின் 19ம் பாசுரத்தின் அடிப்படையில் தான், திருப்பாவைக்கு பராசர பட்டர் தனியன் அருளியுள்ளார் என்பதால் இந்தப் பாசுரம் பராசர பட்டருக்கு மிகவும் உகந்த பாசுரம். எம்பெருமானின் பத்நிகளான ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி ஆகிய மூவருமே கிருஷ்ணாவதாரக் காலத்தில் கண்ணன் அவதரித்தபோது ருக்மணி, சத்யபாமா, நப்பின்னை என்று அவதரித்து, கண்ணனைக் கரம் பிடித்தவர்கள்.
மூவரில் நப்பின்னையை மட்டும் ஆண்டாள் குறிப்பிட்டு மூன்று பாசுரங்கள் அருளியுள்ளதன் காரணம், ருக்மணியும் சத்யபாமாவும் கண்ணனை மணந்து கொண்ட பிறகு தான் நந்தகோபனுக்கு மருமகள்கள் ஆகின்றனர்.
ஆனால், நப்பின்னையோ ஆயர்குலத்தில், யசோதையின் சகோதரனுக்கு மகளாகப் பிறந்தவள் என்பதால், பிறந்த உறவால் முன்னும், மணந்த உறவால் பின்னும் நந்தகோபனுக்கு மருமகள் என்ற பெருமையைப் பெற்றவள்.
இப் பாசுரத்தில் குத்துவிளக்கெரிய என்றருளியுள்ளது, நப்பின்னையுடன் கூடிய திருமகனாகக் கண்ணன் விளங்குவதைச் சொல்லும் விதமாக, குத்து விளக்கே, நீ நப்பின்னைக்கு மட்டும் கண்ணனைக் காட்டுகின்றாய். எங்களுக்கும் கண்ணனைக் காட்டாக் கூடாதா என்று ஏக்கத்துடன் ஆண்டாள் கேட்பதாகவும் பொருள் கொள்ளலாம்.
கண்ணன் அனைவருக்கும் சொந்தம் என்று பக்தியால் முதன் முதலில் பொதுவுடமை சித்தாந்தம் பேசி, தனக்கு மட்டுமே கண்ணன் என்பது போல் இருப்பது உன் தகுதிக்கும் தன்மைக்கும் தகுமோ என்று நப்பின்னையிடம் பக்திப் போர் தொடுத்தவள் ஆண்டாள் என்றும் அனுபவிக்கலாம்.
இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.