/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அங்கன்வாடி கட்டடம் 'பளீச்' அரசியல் பிரமுகர் அசத்தல்
/
அங்கன்வாடி கட்டடம் 'பளீச்' அரசியல் பிரமுகர் அசத்தல்
அங்கன்வாடி கட்டடம் 'பளீச்' அரசியல் பிரமுகர் அசத்தல்
அங்கன்வாடி கட்டடம் 'பளீச்' அரசியல் பிரமுகர் அசத்தல்
ADDED : நவ 12, 2024 08:01 AM

புதுச்சேரி: உழவர்கரை தொகுதி, புதுநகரில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தை, என்.ஆர்., காங்., பிரமுகர் நாராயணசாமி கேசவன் தனது சொந்த செலவில் புதுப்பித்து கொடுத்தார்.
உழவர்கரை தொகுதி புது நகரில் அமைந்துள்ள அரசு அங்கன்வாடி மையம் பழுதடைந்தது. அங்கன்வாடி கட்டடத்தை சரி செய்து தருமாறு, அப்பகுதி பொது மக்கள் தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமிகேசவனிடம் கோரிக்கை வைத்தனர்.
இதை ஏற்று நேரில் ஆய்வு செய்த அவர், தனது சொந்த செலவில் அங்கன்வாடியை புனரமைத்து, புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார். நிகழ்ச்சியில், ஊர் பொதுமக்கள் மற்றும் ஏ.ஆர்.டி.ஏ.,
தொண்டு நிறுவன நிர்வாகிகள், தொகுதி என்.ஆர்.காங்., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.