/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உப்பளத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆய்வு
/
உப்பளத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆய்வு
உப்பளத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆய்வு
உப்பளத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : ஜன 02, 2024 07:54 AM

புதுச்சேரி : உப்பளம் தொகுதி, பிரான்சுவா தோப்பு பகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகளுடன் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆய்வு செய்து சரி செய்தார்.
உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை பிரான்சுவா தோப்பில் பல ஆண்டுகாலமாக குடிநீர் குழாயில் குறைவான அழுத்தத்துடன் தண்ணீர் வந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடியிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். பின் அம்பேத்கர் சாலை பிரான்சுவா சந்திப்பு சாலை வழியாக செல்லும் குடிநீர் பைப் லைன் ஏர் லாக் ஆகியுள்ளதை கண்டறிந்து அப்பகுதியில் உள்ள பைப் லைன் சரிசெய்யப்பட்டு, தண்ணீர் முழு கொள்ளவுடன் குடிநீர் குழாய்க்கு சென்றது. மக்களின் கோரிக்கையை உடனடியாக சரிசெய்து கொடுத்த எம்.எல்.ஏ.,வுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இப்பணியின் போது, பொதுப் பணித் துறை இளநிலை பொறியாளர், பிளம்பர் கணேசன், தி.மு.க., நிர்வாகிகள் சக்திவேல், நிசார்,ராஜி, விநாயகம், செல்வம், செல்லப்பன், ஜெயசீலன், ராகேஷ், மோரிஸ், ரகுமான், டேவிட் ஆகியோர் உடனிருந்தனர்.

