தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வாணரப்பேட்டையில் அனிபால் கென்னடி பிரசாரம்

வாணரப்பேட்டையில் அனிபால் கென்னடி பிரசாரம்

வாணரப்பேட்டையில் அனிபால் கென்னடி பிரசாரம்


ADDED : ஏப் 03, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 08:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உப்பளம் தொகுதி வாணரப்பேட்டை பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொண்ட வளர்ச்சி பணிகள் மற்றும் சாதனைகளை விளக்கி, தி.மு.க., வேட்பாளர் அனிபால் கென்னடி, உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர ஓட்டு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'தொகுதியில் மின் பற்றாக்குறையை போக்க புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புஸ்சி வீதி வடிகால் அலுவலகத்தில் அடைப்பு நீக்க கூடுதலாக ஒரு கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ராசுடையார் தோட்டம் மற்றும் பிரான்சுவா தோப்பு பகுதிகள் நவீன கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது.

திப்புராயப்பேட்டை பகுதி மக்களுக்கு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. தொகுதியில் புதிதாக 1,700 பேருக்கு ரேஷன்கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நலப் பணிகள் தொடர தன்னை மீண்டும் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அப்போது, காங்., மாநில பொதுச்செயலாளர் இளையராஜா, வி.சி.க., மாவட்ட செயலாளர் அனுஷ்யா, தி.மு.க., தொகுதி செயலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us