அவ்வை நகர், உடையார் தோட்டத்தில் அனிபால் கென்னடி ஓட்டு சேகரிப்பு
அவ்வை நகர், உடையார் தோட்டத்தில் அனிபால் கென்னடி ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 04, 2026 08:27 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: உப்பளம் தொகுதி இண்டி கூட்டணியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் அனிபால் கென்னடி நேற்று அவ்வை நகர், உடையார் தோட்டம் பகுதிகளில், ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், 'கடந்த 5 ஆண்டுகளாக உப்பளம் தொகுதியில் அமைதி மற்றும் ஒற்றுமை நிலவி வந்துள்ளது. மக்கள் அனைவரின் ஒத்துழைப்பினாலும், வளர்ச்சி திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதேபோன்று, அமைதியும் ஒற்றுமையும் தொடர வேண்டுமெனில், மீண்டும் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு அளித்து ஓட்டு அளிக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.
பிரசாரத்தின்போது தி.மு.க., நிர்வாகிகள் காங்., மற்றும் வி.சி.,கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
