/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
2023 - 24 பட்ஜெட்டில் செலவு செய்யாததால் ரூ.788 கோடியை திருப்பி அனுப்பிய அவலம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வேதனை

ADDED : மார் 18, 2025 04:23 AM
புதுச்சேரி: 2023 - 24 பட்ஜெட் தொகையில் ரூ.788 கோடி செலவு செய்யாமல் திருப்பி அனுப்பட்டது என அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., குற்றம்சாட்டினார்.
பட்ஜெட் உரை மீதான பொது விவாதத்தில், அவர் பேசியதாவது; புதுச்சேரி பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டமிடல் துளியும் இல்லை. இலவசங்களை கொடுத்தால் சமமான வளர்ச்சி ஏற்பட்டுவிடும் என நினைப்பது தவறான முன் உதாரணம்.
மாநில அந்தஸ்து கேட்டு இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மத்திய அரசுக்கு அனுப்படவில்லை என, சபாநாயகர் குற்றம்சாட்டுவது முதல்வரை சேர்த்து தான் என குறிப்பிட விரும்புகிறேன்.
தனி கணக்கு துவங்கியபோது, கடனை தள்ளுபடி செய்தால் தான் கையெழுத்திடுவேன் என கூறியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. கடனுக்காக 14 சதவீதம் செலவிடுகிறோம். கடனை தள்ளுபடி செய்திருந்தால், ரூ. 1,900 கோடி உபரியாக இருந்திருக்கும். கடன் வாங்கும் தேவை இருக்காது.
நிதி பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை இந்தாண்டு கட்டுக்குள் இருக்கிறது என, கூறினாலும், கடந்த 2023-24 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.788 கோடி செலவு செய்யாமல் திருப்பி அனுப்பி உள்ளீர்கள். கடந்த 2024-25 பட்ஜெட்டில் பிப்., மாதம் வரை ரூ. 2,000 கோடி ஒதுக்கப்பட்ட பணம் இதுவரை செலவு செய்யவில்லை.
பொதுப்பணித்துறையில் மட்டும் ரூ. 150 கோடி செலவு செய்யாமல் இருக்கிறது. கருணாநிதி பெயரில் துவக்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
பட்ஜெட் உரையில் முதல்வர் 50 சதவீதம் தேர்ச்சி, 50 சதவீதம் தோல்வி அடைந்துள்ளார்.
வரும் ஆனால் வராது
மேலும், அவர் கூறுகையில், மணப்பட்டு தீம் பார்க், மருத்துவ படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு, ஐ.டி., பார்க், சேதராப்பட்டில் 150 ஏக்கரில் மருத்துவ பூங்கா, சட்ட பல்கலைக்கழகம், வேளாண் பல்கலை., கழகம், மருத்துவ பல்கலைக்கழகம், பாரதி, சுதேசி, ஏ.எப்.டி. இணைத்து ஜவுளி பூங்கா, நிதி குழுவில் புதுச்சேரி சேர்ப்பு, மாநில அந்தஸ்து, புதுச்சேரி சட்டசபைக்கு புதிய கட்டடம் இவையெல்லாம் வரும் ஆனால் வராது என, கூறினார்.